ஞாயிறு வகுப்புக்கு 2 மணிவரை தடை

Share:
ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடத்த, பிற்பகல் 2 மணிவரை தடை விதிக்கும் யோசனை, மாகாண முதலமைச்சர்களின் 33ஆவது மாநாட்டின் போது, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


அத்துடன், பிரதி ஞாயிறு தோறும், அறநெறிப் பாடசாலைக் கல்வியைக் கட்டாயமாக்கும் யோசனையும், குறித்த மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்டதாக, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

33ஆவது முதலமைச்சர்கள் மாநாடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஹபரண சினமன் லொட்ஜ் உல்லாசப் பயணிகள் விடுதியில், கடந்த சனிக்கிழமை (06) மாலை நடைபெற்றது.

'இதன்போது, 2016ஆம் ஆண்டு அபிவிருத்திக்கென, திறைசேறியிலிருந்து மாகாண சபைகளுக்கு வழங்கப்படுவதாக இருந்த நிதியை, இவ்வருடம் வழங்குவதாக, திறைசேறியின் பிரதிச் செயலாளர் உறுதியளித்தார்' எனவும், சரத் ஏக்கநாயக்க மேலும் கூறினார்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!