சித்திரை புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு

Share:
[Photos :NR]

திருக்கோவில் பொலிஸ் நிலையமும், திருக்கோவில் பிரதேச செயலகம் மற்றும்  திருக்கோவில் பிரதேச விளையாட்டு கழகங்கள்  இணைந்து நடாத்திய சித்திரை புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு 23.04.2017 ஞாயிற்றுக்கிழமை  நேற்றைய தினம் தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மைதானத்தில்  வெகுசிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.சி.ஜெகராஜன், திருக்கோவில் பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பு அதிகாரி திரு.ஏ.எஸ்.கே.பண்டார, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி திரு எஸ்.குணபாலன் மற்றும்  திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு.எஸ்.ஜெயரூபன்,  தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் அதிபர் திரு.வ.ஜயந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும் இதன் போது சித்திரை புத்தாண்டுக்கான கலாசார, பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் மாலை வேளையில் இன் இசை நிகழ்வும் இடம்பெற்றது.No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!