முதலாம் இரண்டாம் தரங்களுக்கு ஆங்கிலம்

Share:
பாடசாலைகளில், முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களுக்கு ஆங்கிலமொழிப் பாடப் புத்தகத்தை அறிமுகப்படுத்துவதற்கு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தீர்மானித்துள்ளார் என்று, கல்வியமைச்சின் தகவல் தெரிவிக்கிறது.அதனூடாக, ஆரம்பத்திலிருந்தே ஆங்கில மொழியறிவை மேம்படுத்துவதற்கு, இதனூடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பில் தேசிய கல்வி நிறுவகம் மற்றும் கல்வியமைச்சின் ஆங்கில மற்றும் வெளிநாட்டு மொழி தொடர்பிலான பிரிவின் அதிகாரிகளுக்கு, கல்வியமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஆங்கில மொழி பாடப்புத்தகம், 3ஆம் தரத்திலிருந்தே, தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!