எச்­ச­ரிக்­கை­.! நாடு முழு­வதும் மூன்று வகை­யான தொற்று நோய்கள்

நாடு முழு­வதும் தற்­போது டெங்கு, டெங்கு நோய்க்கு இணை­யா­ன­தொரு வைரஸ் மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற மூன்று வகை­யான தொற்று நோய்த் தாக்­கங்கள் பரவி வரு­வ­தாக, சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்ள நிலையில், இந் நோய்த் தாக்­கங்­க­ளி­லி­ருந்து தம்­மையும், தமது சிறு பிள்­ளை­க­ளையும் இயன்­ற­ளவு பாது­காத்துக் கொள்­ளு­மாறு, மினு­வாங்­கொடை பிர­தேச வாழ் மக்­களை மினு­வாங்­கொடை சுகா­தார வைத்­திய அதி­காரிப் பிரிவின் பத்­தண்­டு­வன பொது சுகா­தாரப் பரி­சோ­தகர் எஸ். ஆர். எம். எஸ். ஆர். சமர திவா­கர எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.



குறிப்­பாக, சிறு பிள்­ளை­க­ளுக்கு இந் நோய்கள் விரைவில் தொற்றக் கூடும் என, சுகா­தார அமைச்சு சிவப்பு அறி­வித்தல் விடுத்­துள்­ளதால், இது குறித்து பெற்­றோர் முன்கூட்­டியே விழிப்­பு­டனும், அவ­தா­னத்­து­டனும் செயற்­ப­டு­மாறும் அவர் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

முஸ்­லிம்கள் செறிந்து வாழும் மினு­வாங்­கொடை, கல்­லொ­ழுவை, கோப்­பி­வத்தை ஆகிய பிர­தே­சங்­களில் டெங்கு மற்றும் டெங்கு நோய்க்கு இணை­யா­ன­தொரு வைரஸ் காய்ச்சல், மிகத் துரி­த­மாகப் பரவி வரு­வது தற்­போது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில், இப் பிர­தே­சங்­க­ளி­லுள்ள எவ­ருக்­கா­வது காய்ச்சல் அறி­கு­றிகள் தொடர்ந்து மூன்று நாட்­க­ளுக்கு மேல் தென்­பட்டால், எந்­த­வித கால தாம­த­மு­மின்றி அரு­கி­லுள்ள வைத்­தி­ய­சா­லைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்­ளு­மாறும், அவர் பொது மக்­களைக் கேட்­டுள்ளார்.

இதே­வேளை, பொல்­வத்தை, பத்­தண்­டு­வன, கொட்­டு­கொடை ஆகிய பிர­தே­சங்­களில் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர், பன்றிக் காய்ச்சல் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் இப் பிரதேச மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!