பெற்றோல் நிரப்பு நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்

Share:
பெற்றோலுக்கான கேள்வி அதிகரித்தமையினால் இன்று (24) காலை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வாகனங்களால் நிரப்பி காணப்பட்டது.


சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பெற்றோல் இருக்கின்ற நிலையங்கள் மக்கள் வெள்ளத்தால் சூழ்ந்து காணப்பட்டது.


விநியோகிப்பதிலேயே சிக்கல்...

குறித்த போராட்டம் காரணமாக, கொலன்னாவ எரிபொருள் களஞ்சியத்திலிருந்து எரிபொருளை விநியோகிப்பதிலேயே தடை காணப்படுவதாகவும், களஞ்சியத்தில் போதியளவான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தபானத்தின் தலைவர் ஷெஹான் செனவிரத்ன தெரிவித்தார்.
திருகோணமலை எண்ணெய் குதத்தை இந்தியாவுக்கு வழங்கியமை உள்ளிட்ட ஒருசில விடயங்கள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து, பெற்றோலிய தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் வாகனங்களால் நிரம்பி வழிகின்றது.

இன்னும் ஓரிரு மணி நேரங்களில் நாடு முழுவதிலுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் எரிபொருள் நிரப்பு நிலையம்
No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!