நாளை தாண்டியடி ஸ்ரீ சங்கமன்கண்டி காட்டுபிள்ளையார் தேவஸ்தான சங்காபிஷேக விஞ்ஞாபனம்

Share:
வரலாற்றுச் சிறப்புமிக்க  தாண்டியடி அருள்மிகு  ஸ்ரீ சங்கமன்கண்டி காட்டுபிள்ளையார்  தேவஸ்தான கும்பாபிஷேக தின அஷ்டோத்ரர் சங்காபிஷேக விஞ்ஞாபன நிகழ்வானது நாளை 09.04.2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

இதன்போது காலை 09.00 மணியளவில் சங்காபிஷேக கிரியைகள் ஆரம்பமாகி பகல் 11.30 மணியளவில் சங்காபிஷேகம் இடம்பெற்று தொடர்ந்து அலங்காரப் பூசையும், தொடர்ந்து சுவாமி உள்வீதி உலாவருதல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இக் சங்காபிஷேக  கிரியைகள் அனைத்தும்  சிவஸ்ரீ. கேதீஸ்வர   குருக்கள் தலைமையிலான குருமார்களால் நடத்தப்படவுள்ளது.

அனைவரும் வருக! திருவருள் பெறுக....!

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!