இன்புளுவன்சா ஏ வைரஸ்; ஐவர் உயிரிழப்பு

Share:
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்புளுவன்சா ஏ வைரஸ் காரணமாக, இம்மாதம் ஐவர் உயிரிழந்துள்ளனரெனவும் ஏழுவர் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அனூசியா ராஜ்மோகன் அவர்கள் 22.04.2017  நேற்று தெரிவித்தார்.


காய்ச்சல் காரணமாக, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சேவைப்பிரிவுக்கு (ETU) நாளொன்றுக்கு 25 பேருக்கும் அதிகமான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் 47க்கும் மேற்பட்ட நோயாளர்கள் இனங்காணப்பட்டு சிகிச்சை பெற்றுச்சென்றுள்ளார்களெனவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் மட்டுமல்லாது ஹொரவபொத்தானைப் பகுதியிலிருந்தும் நோயாளர்கள் சிகிச்சைக்காக வருகை தருவதாகவும் போதுமான வைத்தியர்களும் சிற்றூழியர்களும் இல்லாமையினால் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்....

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!