க.பொ.த. (சா/த) பரீட்சை முடிவுகள் மார்ச் 28 இல்

Share:
கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.


கடந்த வருடம் (2016) டிசம்பர் மாதம் இடம்பெற்ற (டிச. 6 - 17) குறித்த பரீட்சைகள், நாடு முழுவதிலுமுள்ள 538 இணைப்பு நிலையங்களின் கீழுள்ள 5,669 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்றதோடு, பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் சுமார் 7 இலட்சம் மாணவர்கள் இப்பரீட்சையில் தோற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!