Monday, March 27, 2017

குருதேவர் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டி -2017

[NR]

குருதேவர் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டி நிகழ்வு 26.03.2017 ஞாயிற்றுக்கிழமை   நேற்றைய தினம் மாலை  மணியளவில் குருதேவர் பாலர் பாடசாலையில்  பாடசாலையின்  முகாமைத்துவ பணிப்பாளர்  திரு.பா.சந்திரேஸ்வரன்  அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  திருக்கோவில் கோட்டக்கல்வி பணிப்பாளரும், முன்பள்ளி ஒருங்கிணைப்பாளருமான திரு.செ.தர்மபாலன் அவர்களும் மற்றும் தம்பிலுவில் இரண்டு கிழக்கு பிரிவு கிராம அலுவலர்  திரு  ரி.சுயகுமார் அவர்களும் மற்றும் தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.கண.இராசரெத்தினம் அவர்களும் கடந்து கொண்டனர்.

மேலும் இதன்போது  பாலர் பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள்  நடைபெற்றதுடன் அதில் கலந்து கொண்ட மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இதில் பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவர்களின்  பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.






































No comments:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!