Wednesday, March 15, 2017

திருக்கோவில் பிரதேசத்தில் 10 டெங்கு நோய் தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர். வெளிப் பிரதேசம் சென்றுவருவோர் விழிப்பாக இருக்குமாறு கோரல்


[திருக்கோவில் நிருபர் ஏ.எஸ்.கே ]

திருக்கோவில் பிரதேசத்தில் 10 டெங்கு நோய் தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர். வெளிப் பிரதேசம் சென்றுவருவோர் விழிப்பாக இருக்குமாறு சுகாதார வைத்திய அதிகாரி கோரல்

அம்பாறை திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தைமாதம் தொடக்கம் மார்ச் மாதம் வரை 10 டெங்கு நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். திருமதி சுலோசனா இராஜேந்திரா தெரிவித்துள்ளார்.

திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் டெங்கு நோய் தொற்று தொடர்பாக அவரிடம் வினாவிய போதே மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இவ் நோய் தொற்றாளர்கள் அனைவரும் கொழும்பு, மன்னார் மாவட்டங்களில் தொழில் நோக்காச் சென்று வீடு திரும்பியவர்களே டெங்கு நோய்க்கு தொற்றாகியுள்ளர். அந்தவகையில் தைமாதம் 5பேரும், பெப்ரவரிமாதம் 4பேரும், மார்ச் 01வருமாக 10பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை பிரதேசத்தில் தமது அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் உத்தியோகத்தர்களின் மூலமாக வீட்டுத் தரிசிப்புக்கள் நடத்தி வருவதுடன் பல இடங்களில் டெங்கொழிப்பு சிரமதானப் பணிகளையும் மேற்கொண்டு வருவதுடன் மருந்து புகைகளும் விசிறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் திருக்கோவில் பிரதேசத்தில் தம்பிலுவில்,திருக்கோவில் கிராமங்களின் கடற்கரையோரங்களில் பாயன்படுத்தப்படாத நிலையில் இருந்த சுமார் 55க்கு மேற்பட் கிணறுகள் உடைக்கப்பட்டு மூடப்பட்டதுடன் மலசலகூடங்களின் குழிகளும் அழிக்கப்பட்டுள்ளதுடன் பொது மக்களையும் சூழலை சுத்தம் செய்து விழிப்பாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!