Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு தேசிய வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு

நாடளாவியரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு தேசிய வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு 12.02.2017 நேற்று ஞாயிற...


நாடளாவியரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு தேசிய வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு 12.02.2017 நேற்று ஞாயிற்றுக்கிழமை திருக்கோவில் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் திருக்கோவில் பிரதேச உதவி பிரதேச செயலாளர் திரு.எஸ்.ஜெயரூபன் அவர்களுடன் இணைந்து இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் திரு.மோகன்ராஜ் ஆகியோர் ஒருங்கிணைப்பில் திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.எஸ்.ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


இவ் இறுதி நாள் நிகழ்வில் கழகங்களுக்கு இடையிலான மற்றும் அரச திணைக்களங்களுக்கிடையிலான எல்லே மற்றும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி என்பன இடம்பெற்றன. 

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து 11 விளையாட்டு கழகங்கள் மற்றும் 08 அரச திணைக்களங்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டிய இன்றைய போட்டிகளில் தம்பிலுவில் Rangers vs தாண்டியடி Super Hit ஆகிய அணிகள் பங்கு பற்றிய கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தம்பிலுவில் Rangers அணி வெற்றியீட்டி கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

அதற்கடுத்து இடம்பெற்ற அரச திணைக்களங்களுக்கிடையிலான கிரிக்கெட் இறுதிப்போட்டியில் திருக்கோவில் பிரதேச செயலக அணி vs சாகாமம் விஷேட அதிரடிப்படை(STF) அணி என்பன மோதிக்கொண்டன. பலம்பொருந்திய அணியான சாகாமம் விஷேட அதிரடிப்படை அணியினரை மிக லாவகமாக எதிர்கொண்ட திருக்கோவில் பிரதேச செயலக அணியினர் வெற்றியீட்டி வெற்றி கிண்ணத்தை தமதாக்கி கொண்டனர்.

இப்போட்டித்தொடரின் தொடர் நாயகனாக பிரதேச செயலக அணியின் செல்வகுமார் தெரிவு செய்யப்பட்டதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக பிரதேச செயலக அணியின் வீரர் ருபேஸ் தெரிவு செய்யப்பட்டார்...