கூகுளில் வேலைக்கு விண்ணப்பித்த 7 வயது சிறுமி; பதில் அனுப்பிய தலைமை அதிகாரி

லண்டனைச் சேர்ந்த 7 வயது சிறுமியான கோலெ பிரிட்ஜ்வாட்டர், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


தனக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை வழங்குமாறு கோரியே அந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கோலெ எழுதியிருப்பதாவது;

”என் பெயர் கோலெ, நான் வளரும் போது கூகுளில் வேலை செய்ய விரும்புகிறேன். இதோடு நான் சாக்லேட் ஃபேக்ட்ரியில் பணிபுரியவும், ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் கலந்துகொள்ளவும் ஆசை கொண்டுள்ளேன். நான் ஒவ்வொரு சனி மற்றும் செவ்வாய்க் கிழமைகளிலும் நீச்சல் பயிற்சிக்கு செல்கிறேன்.

கூகுளில் பணியாற்றும் போது பீன் பேக்களில் உட்கார்வது, சறுக்கிச்சென்று விளையாடுவது மற்றும் கோ கார்டிங் போன்றவற்றில் ஈடுபட முடியும் என்று என் தந்தை தெரிவித்தார். எனக்கு கம்ப்யூட்டர்களையும் பிடிக்கும். என்னிடம் டேப்லெட் ஒன்று உள்ளது. டேப்லெட்டில் நான் கேம்களை விளையாடுவேன், அதில் சதுர வடிவில் இருக்கும் ரோபோக்களை மேலும், கீழுமாக வைத்து விளையாடுவேன்.

கம்ப்யூட்டர் படிப்பது எனக்கு நல்லது என்று என் அப்பா தெரிவித்துள்ளார். அவர் எனக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். தற்போது எனக்கு 7 வயதாகிறது மேலும் எனது ஆசிரியர்கள் நான் வகுப்பில் சிறப்பாக செயற்படுவதாக என் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அனைத்து பாடங்களிலும் சிறப்பாகப் படிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். நான் இதே போல் நன்கு படித்தால் ஒரு நாள் கூகுளில் எனக்கு வேலை கிடைக்கும் என என் தந்தை தெரிவித்துள்ளார்.

என் தங்கை ஹோலீயும் திறமையானவள், அவளுக்கு 5 வயதாகிறது. ஹோலீக்கு பொம்மைகளுடன் விளையாடுவது மற்றும் ஆடை அணிந்துகொள்வது பிடிக்கும். என் தந்தை உங்களுக்கு கடிதம் எழுதி கூகுளில் வேலைக்கு விண்ணப்பிக்குமாறு என்னிடம் தெரிவித்தார். உண்மையில் வேலை குறித்து எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் கடிதம் எழுதுவது இப்போதைக்கு போதுமானதாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

என் கடிதத்தைப் படித்தமைக்கு நன்றி. நான் எழுதிய இரண்டாவது கடிதம் இது. எனது முதல் கடிதத்தை என் தந்தைக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல எழுதினேன்.

குட் பை.
கோலெ பிரிட்ஜ்வாட்டர், வயது 7.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்திற்கு கூகுளின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை பதில் கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,
”இந்த கடிதம் எழுதியமைக்கு நன்றி. உனக்கு ரோபோக்கள், கம்ப்யூட்டர்களை பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தொழில்நுட்பம் சார்ந்து தொடர்ந்து படிப்பாய் என நம்புகிறேன். உனது கனவு மற்றும் இலக்குகளை மனதில் வைத்து கடினமாக உழைத்தால் நீ மனதில் நினைத்தது அனைத்தும் – கூகுளில் பணியாற்றுவதில் இருந்து ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் கலந்துகொள்வது வரை அனைத்தையும் செய்ய முடியும். படிப்பை முடித்த பின் கூகுளில் பணியில் சேர உனது விண்ணப்பத்தை எதிர்நோக்கி காத்திருப்பேன். உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துக்கள்.”

என சுந்தர் பிச்சை தனது பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!