சாதாரண தரப் பரீட்சைக்கான செயல்முறை பரீட்சை இம்மாதம் 21ம் திகதி

Share:
2016ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான செயல்முறை பரீட்சை இம்மாதம் 21ம் திகதி ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மார்ச் 04ம் திகதி வரை அந்தப் பரீட்சை இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார கூறினார்.
செயல்முறைப் பரீட்சையை நடத்தும் ஆசிரியர்களுக்கான விஷேட பயிற்சி எதிர்வரும் 07ம் திகதி முதல் 16ம் திகதி வரை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியற்கலை பாடத்திற்காக தோற்றிய ஒரு இலட்சத்து 70,000 மாணவர்கள் இம்முறை செயல்முறைப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார கூறினார்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!