திருவெம்பாவை பாடல்கள் "எம்பெருமானே எம்பாவாய்" இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு

Share:
மாதங்களின் சிறந்தது மார்கழி, இம்மாதத்தில் சிவபெருமானுக்குரிய விரதமான திருவெம்பாவை விரதத்தினை முன்னிட்டு இந்து ஸ்வயம் சேவக சங்கத்தினரின் ஏற்பாட்டில் இளம் கலைஞர்களை கொண்டு திருவெம்பாவை பாடல்களை  "எம்பெருமானே எம்பாவாய் " எனும்  இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு கடத்த 04.01.2017 அன்று மாலை தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்றது.


இவ் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வானது தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ.க.லோகனாதக்குருக்கள் ஐயா அவர்களின் ஆசியுடன் ஆரம்பமான  இந்நிகழ்வில் தேவார இசைக்கலை மாமணி திரு.வீ.உதயகுமார் அவர்களும், மற்றும் அம்பாறை மாவட்ட இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் காரியவான் திரு.இ.குணசிங்கம் அவர்களும், மற்றும்  தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய நிர்வாக சபையினர் மற்றும் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் திருக்கோவில் பிரதேச பொறுப்பாளர் திரு.கை.வரதராஜன் அவர்களும் மற்றும் பக்த அடியார்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!