தம்பிலுவில் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற கஜமுகாசூரன்போர் நிகழ்வு

Share:

[Photos: NR]

கடந்த 14.12.2016 அன்று  ஆரம்பமான விநாயகர் சஷ்டி விரதமாது வெகுசிறப்பான முறையில் தம்பிலுவில்  ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் தினமும் பூஜைகள், ஆராதனைகளும் இடம் பெற்றுவருவதுடன் தினமும் பிள்ளையார் கதை கூறும் நிகழ்வும் இடம் பெற்று வந்தது .

இவ் விநாயகர் சஷ்டி விரதத்தினை சிறப்பிக்கும் வகையில் கடந்த வருடம் ஆரம்பமான கஜமுகாசூரன்போர் நிகழ்வானது இவ்வருடமும் விரதத்தின் சதுர்த்தி  தினத்தன்று எந்த ஆயுதத்தினாலும் சாகாவரம் பெற்ற கஜமுகா அசுரனை தனது தந்தத்தினால் அழித்து தனது  மூசிக வாகனமாக்கிய நிகழ்வினை இவ் பூஉலக  மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பிள்ளையார் கதை(விநாயகர் புராணம்) ஆகியவற்றில் குறிப்பட்டவாறு இவ் கஜமுகாசூரன்போர் நிகழ்வானது தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.க.லோகனாதக்குருக்கள் அவர்களின்  ஆசியுடன்  கண்ணகி கலை அரங்கின் முற்றத்தில் கொம்புசந்தியில்  02.01.2017 திங்கள்கிழமை நேற்றைய தினம் இடம்  பெற்றது.

இவ் சூரன்போர் நிகழ்வில் ஏராளமான பக்த அடியார்கள் இந் நிகழ்வில்  கலந்து கொண்டனர்.

காணொளி விரைவில்....


No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!