Friday, January 27, 2017

தம்பிலுவில் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இல்லங்களுக்கான  ஓவர்கள்  மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு 7 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கல்லூரியின் அதிபர் திரு வ.ஜயந்தன் தலைமையில் 2017.01.26 நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது .


இதில் நாணயச்சுழற்சியில் இளங்கோ வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி  போட்டியில் இதில் கம்பர் இல்லத்தினர் முதலாவதாக ஆட்டத்தினை ஆரம்பித்தனர் இவர்கள்  73 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு துடிப்பெடுத்தாடிய இளங்கோ இல்லத்தினர்  வெற்றி பெற்று  இறுதி சுற்றுக்கு தெரிவானது.

பின்னர் இரண்டாம் சுற்றான இறுதி சுற்றல் வள்ளுவர் மற்றும் இளங்கோ  இல்லத்தினர் மோதிக்கொண்டனர். இதிலும் இளங்கோ  இல்லத்தினர் முதலாவதாக களமிறங்கினர் இவர்கள்  ஓவருக்கு 93 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு துடிப்பெடுத்தாடிய வள்ளுவர்  இல்லத்தினர் 94 ஓட்டங்களை பெற்று    வெற்றியை பெற்றனர்.

இதன் அடிப்படியில் எல்லே போட்டியில் 1ம் இடத்தினை வள்ளுவர்  இல்லமும், 2ம் இடத்தினை இளங்கோ இல்லமும்,  3ம் இடத்தினை கம்பர்  இல்லமும் பெற்றுக்கொண்டன.



































No comments:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!