வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கும் நிகழ்வு

Share:
எமது பிரதேசத்தில் பின்தங்கிய கிராமங்களில் கல்வி கற்றுவரும் மாணவர்களுக்காக கல்விசார் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு canada Chidaes அமைப்பின் உதவியுடன் குடிநிலம், மண்டானை, காஞ்சிரம்குடா, ஸ்ரீவள்ளிபுரம், தாண்டியடி  போன்ற பகுதிகளில் கல்விகற்கின்ற வசதிகுறைவான மாணவர்களுக்கு அவர்களின் கல்வியை தொடர  துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கும் நிகழ்வானது காஞ்சிரம்குடா கிராம பல்தேவை கட்டடத்தில் நேற்று  31.12.2016 சனிக்கிழமை  canada Chidaes அமைப்பின் திருக்கோவில் பிரதேச ஒருங்கிணைப்பாளர்களான M.மேகசியாமளன் மற்றும் S.தேவிதர்சன்  தலைமையில் கிராம அலுவலர்  திரு.ஏ.மனோகரன் உதவியுடன்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் திருக்கோவில் வெட்டுகுளப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ச.தயாளன் குருக்கள் ஐயா அவர்களின் ஆசியுடன்  ஆரம்பமான இந்நிகழ்வில், திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு.சீ.ஜெயருபன் மற்றும்  திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் எம்.மோகனகாந்தன், திருக்கோவில் பொலிஸ் நிலைய  போக்குவரத்து பிரிவு  பொலிஸ் அதிகாரி திரு. சிசிர குமார  மற்றும் திரு.P.சசிகரன், திகோ/ தாண்டியடி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு.S.ஸ்ரீகாந்தன், திகோ/ காஞ்சிரம்குடா வித்தியாலயத்தின் அதிபர் திரு.எஸ்.சண்முகநாதன் மற்றம் canada Chidaes அமைப்பின்  கல்முனை பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள் திருவி.ரவிச்சந்திரன் ஆகியோரும் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






































No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!