தம்பிலுவில் கலைமகள் உதயதாரகை முன்பள்ளியின் 36வது விடுகை விழா

Share:
தம்பிலுவில்  கலைமகள்  உதயதாரகை  முன்பள்ளியின் 36வது  விடுகை விழாவானது  கடந்த 2016.12.24 அன்று  தம்பிலுவில் கலைமகள் வித்தியாலத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக  திருக்கோவில் கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு.வா.குணாளன், திருக்கோவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.செ.தர்மபாலன், தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய அதிபர் திரு.த.யோகேஸ்வரன் மற்றும்  தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.கண.இராசரெத்தினம் ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

அத்துடன் இவ்  விடுகை விழாவில்  பாலர் பாடசாலையின் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்வுக்கும் இடம் பெற்றது. இன் நிகழ்வில் பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள், பாலர் பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்



















No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!