தம்பிலுவிலில் துவிச்சக்கர வண்டி - மோட்டார் சைக்கிள் விபத்து, மூவர் படு காயம்

Share:
தம்பிலுவில்  பிரதான  வீதியில் சன் - புட் (Sun Food)  வியாபார நிலையத்திற்கு அருகாமையில் 22.12.2016 வியாழன் இன்று இரவு சுமார்  8.00 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் மூவர் படு காயமடைந்த நிலையில் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.  இவர்கள் தம்பிலுவில் பிரதேசத்தை சேர்ந்த 8-10வயதினை உடைய சிறுவன் ஒருவனும், இரு இளைஞர்களும் ஆவர்.

 மேலும் சிறுவன் சன் - புட் வியாபார நிலையத்தில் பொருட்கள் கொள்வனவு செய்துவிட்டு  தனது வீட்டிற்கு துவிச்சக்கர வண்டியில் திரும்பிய  தருணத்திலே, அக்கரைப்பற்று  நோக்கி  வேகமாக பயணித்த  மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டியில் மோதுண்டதனால் இவ் விபத்து நேர்ந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற் கொண்டுவருகின்றனர்.


No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!