மட்டக்களப்பு நகரில் பதட்டம் முடங்கியது நகரம் தமிழ் வாலிபர்களின் எழுற்சியினால் வெடி கொழுத்தி இறக்கப்பட்டார் விகாராதிபதி

(photos & news: Battinews) பொதுபலசேனாவின் மட்டக்களப்பு வருகைகக்கு நீதி மன்றம் தடை விதித்ததிற்கு எதிர்ப்புத் தெரிவித்ததைக் கண்டித்து மங்களராமய விகாராதிபதியின் அடாவடித்தனத்தினால் நகரில் பதட்டம் ஏற்பட்டதோடு போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டது.விகாராதிபதியை வெளியில் வர விடாது பொலிசார் வீதித் தடையை ஏற்படுத்தியதால் பொலிசாருடன் முறுகல் நிலை ஏற்பட்டது.


தடையின் மறுபுறத்தினால் உள்ளுர் வீதிகள் வளியே தேரர் சிங்கள மக்களைத் திரட்டிக் கொண்டு கூக்குரல் மற்றும் கோஷம் இட்டு சென்றதினால் தமிழ் இளைஞர்களிடையே முறுகல் ஏற்பட்டு தமிழ் வாலிபர்கள் சிங்களவரைத் தாக்க முற்பட்டபோது பொலிசார் கலகத்தைப் பொலிசார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

மீண்டும் வீதியின் பிரதான தடைக்கு சென்ற விகாராதிபதி தடையின் மேல் ஏறி ஒரு மதகுருவிற்று முற்றிலும் ஒவ்வாத நிலையில் வார்த்தைப் பிரையோகத்தைப் பாவித்து ஒட்டு மொத்த முழு பௌத்த துறவிகளையும் அவமானப்படுத்தியுள்ளார்.

இதனை அவதானித்த இளைஞர்கள் பொலிஸ ;நிலையத்தின்; எதிரில் ஒன்றுகூடி தேரரின் அடாவடித்தனத்தைக் கண்டித்து விகாராதிபதியைக் கைதுசெய்யும்படி கோஷமிட்டனர். போலிசாரினால் இளைஞர்களை சமரசப்படுத்த முயற்சித்தபோதும் அது முயற்சியளிக்கவில்லை.

சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ. யோகேஸ்வரன், எஸ். வியாளேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரக்குமார், ஞா. கிருஷ்ணபிள்ளை, பொன் செல்வராசா, பா. அரியநேத்திரன், ஜேசுசபைத்துறவி அருட்தந்தை ஜோசப்மேரி ஆகியோர் கலந்து கொண்டு தேரரருக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டனர்.

பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பைப் பலப்படுத்தினர்இச்செய்தி பதிவேற்றம் செய்யப்படும் வரை இளைஞர்கள் சம்பவ இடத்திலிருந்து அகலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!