நாட்டிலுள்ள அனைத்து சிற்றுண்டிச் சாலைகளையும் சோதனையிடுவதற்கு விசேட வேலைத்திட்டம்

Share:
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிற்றுண்டிச் சாலைகளையும் சோதனையிடும் விசேட வேலைத்திட்டம் 05.12.2016 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்களால் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
நுகர்வோர் சட்டத்தை மீறி செயற்படும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களுக்கு எதிராக இதன் போது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் பொருளாளர் யசஸ் முதலிகே குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு உணவுப் பொருட்களின் கொள்வனவு அதிகரிப்பதால் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!