நாளைய தினம் இளைஞர் பாராளுமன்ற தேர்தல் - வாக்காளர்களுக்கான அறிவுறுத்தல்கள் விபரம்

Share:
நாளைய தினம் 2016.12.18 ஆந் திகதி காலை 07:00 மணி தொடக்கம் பி.ப 04:00 மணி வரை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது .


 இதில் திருக்கோவில் பிரதேசசெயலாளர் பிரிவில் 609 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதன்படி எந்த எந்த கழகங்கள்,  எத்தனை வாக்காளர்கள் வாக்களிக்கலாம் எனும் விபரம் கீழுள்ள புகைப்படத்தில் உள்ளது.

அத்துடன் இவ் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் திருக்கோவில் பிரதேசத்தில் சிவனேசன் டினோஜன் அவர்கள் போட்டியிடுகிறார்.


 இத் தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு வாக்காளர்களாக தகுதி பெற்றோர் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் கீழ் குறிப்பிடப்படும் ஆவணங்களில் ஒன்றை சமர்பித்தல் வேண்டும்.
 1. தேசிய அடையாள அட்டை 
 2. வாகன சாரதி அனுமதிப்பத்திரம் 
 3. புகைப்படம் ஒன்றுடன் கூடிய செல்லுபடியான அடையாள அட்டை – கிராம அலுவலரினால் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். 
 4. கடவுச்சீட்டு 
 5. இளைஞர் கழக அங்கத்தவர் அடையாள அட்டை
 இது தவிர எதுவாக இருந்தாலும் வாக்குச்சீட்டு வழங்கப்படமாட்டாது.

இதனோடு, வாக்களிப்பவர் பின்வரும் தகமைகளை கொண்டிருத்தல் வேண்டும்.
 • 2015 ஆம் வருடத்தில் 2016.08.31 ஆந் தினத்திற்குள் தங்களது கழகம் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். 
 • தங்களது கழகப் பதிவின் போது வழங்கப்பட்ட அங்கத்தவர்கள் பட்டியலில் உள்ளவராய் இருத்தல் வேண்டும். 
 • 13-29 வயதிற்கு உட்பட்டவராய் இருத்தல் வேண்டும் 
 • 2016 ம் வருட இளைஞர் கழக அங்கத்தவராக இருத்தல் வேண்டும். 
 • 2016 ம் வருட இளைஞர் வாக்காளர் பட்டியலில் உள்ளவராய் இருத்தல் வேண்டும். 
 • திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் நிரந்தர வசிப்பாளராக இருத்தல் வேண்டும்.
No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!