பாடசாலை அதிபர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரிப்பு

Share:
பாடசாலை அதிபர்களுக்கு எதிராக அதிக முறைப்பாடுகள் கிடைப்பதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அடுத்த வருடத்திற்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு அதிபர்கள் இலஞ்சம் பெற்றுக் கொள்வது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இலஞ்சம் கேட்டல், அதனை பெற்றுக் கொண்டமை, போலி ஆவணங்களை தயாரித்து மாணவர்களை முதலாம் தரத்திற்கு அதிபர்கள் இணைத்துக் கொள்வதாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!