திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக நலன்புரிசங்கத்தின் 2016ஆம் ஆண்டின் ஆண்டிறுதி நிகழ்வும் பிரியாவிடையும்

Share:
[Photos: S.Raju]

திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின்  நலன்புரிசங்கத்தின் 2016ம் ஆண்டின் ஆண்டிறுதி  நிகழ்வும் பிரியாவிடை நிகழ்வானது  திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் நலன்புரிசங்க தலைவர் திரு.கே.பிரபாகரன்  தலைமையில் 27.12.2016 நேற்று  செவ்வாக்கிழமை திருக்கோவில் வலயகல்வி அலுவலகத்தின் தண்டியடி வள நிலையத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் ஒய்வு பெற்ற  வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி. திலகவதி கணேசமூர்த்தி மற்றும் திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன் மற்றும்  பிரதிக்கல்வி  பணிப்பாளர்கள் , கணக்காளர், பொறியியாளர்கள்,  இங்கு கடமையாற்றி  இடமாற்றமடைந்து  சென்ற அதிகாரிகள், உத்தியோகத்தர்கள்,   வலயக்கல்வி அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் போன்றோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அத்துடன்  இந்நிகழ்வில் இவ்  அலுவலகத்தின் ஒய்வு பெற்ற  வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி. திலகவதி கணேசமூர்த்தி அவர்கட்கும், இங்கு கடமையாற்றி  இடமாற்றமடைந்து  சென்ற பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு.எம்.மகேந்திரகுமார் மற்றும்  உத்தியோகத்தர்களுக்கும் நினைவு பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.


No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!