உயர்தர மாணவர்களுக்கு இலவச TAB களை வழங்க நடவடிக்கை எடுப்போம் : பிரதமர் ரணில் விக்ரமசிங்க

ஹொங்கொங்கில் நடைபெறும் ஜேர்மனின் வர்த்தகத்திற்கான 15 ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விசேட உரையாற்றினார்.
ஹொங்கொங் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஜேர்மன் மற்றும் ஆசிய பசுபிக் வலயத்தின் முக்கிய சட்ட வகுப்பாளர்கள், புத்திஜீவிகள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில் பிரதமர் தெரிவித்ததாவது,

"எதிர்கால சமூக மற்றும் பொருளாதார சவால்களை எதிர்நோக்குவதற்காக, டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுத்து வருகின்றது. முதற்கட்டமாக நாடு பூராகவும் 1000 மத்திய நிலையங்களில் இலவச WiFi வசதியை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிவாரணக் கடன் திட்டத்தின் கீழ் மடிக்கணனிகளைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளோம். தகவல் தொழில்நுட்பம் தொடர்பான கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். 13 வருட பாடசாலைக் கல்வியைக் கட்டாயப்படுத்துவதுடன், தொழிற்துறையினை மேம்படுத்தி சிறந்த சமூகம் ஒன்றை உருவாக்குவதன் ஊடாக இலங்கையில் முக்கிய சீர்திருத்தங்கள் பலவற்றை முன்னெடுக்கவுள்ளோம். அடுத்த இரண்டு வருடங்களுக்குள் உயர்தர மாணவர்களுக்கு இலவச TAB களை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்."

இதேவேளை, ஜேர்மனின் பிரதி சான்ஸ்லர் சிக்மா கெப்ரியலுடன் இருதரப்புக் கலந்துரையாடலிலும் பிரதமர் ஈடுபட்டார்.

இதன்போது GSP+ சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக சிக்மா கெப்ரியல் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டது.

இந்த மாநாட்டை முன்னிட்டு சர்வதேசத் தலைவர்களுடனான சந்திப்பிலும் பிரதமர் கலந்துகொண்டார்.
Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!