பியசேன பிணையில் விடுதலை.!

Share:
அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பியசேனவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உறுப்பினரை, ரூபா 25 ஆயிரம் ரொக்க பிணையிலும், 5 மில்லியன் பெறுமதியான 4 சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அரச வாகனத்தை திருப்பி கையளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடந்த ஜூலை மாதம் 29ஆம் திகதி பியசேன கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!