புகைத்தல் காரணமாக வருடம் ஒன்றில் 20 ஆயிரம் இலங்கையர்கள் பலி!

Share:
புகைத்தல் காரணமாக வருடம் ஒன்றில் சுமார் 20 ஆயிரம் இலங்கையர்கள் பலியாவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் மஹிபால தெரிவித்தார்.

புகைத்தல் காரணமாக நாளொன்றுக்கு சராசரியாக 57 பேர் மரணத்தை தழுவுவதாக சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் சுட்டிக்காட்டினார்.

புகைத்தல் தவிர்ப்பு வலயங்களை பிரகடனப்படுத்தல், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தல், சிகரட் பெட்டிகளில் புகைப்படங்கள் மூலமான எச்சரிக்கை விடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் இலங்கையில் புகைப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

தொடர்ந்தும் இலங்கையில் புகைத்தலை கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!