தேசிய வாசிப்பு மாதமும், விழிப்புனர்வுப் பேரணினையும்

Share:

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு திருக்கோவில் பிரதேச சபையின் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற  தேசிய வாசிப்பு மாதமும், விழிப்புனர்வுப் பேரணினையும் நிகழ்வானது திருக்கோவில் பிரதேச சபையின் செயலாளர் திரு.ஏ.சுந்தரகுமார் தலைமையில் கடந்த 28.20.2016 வெள்ளிக்கிழமை பொது நூலகம் தம்பிலுவிலில் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சபையின் செயலாளர் திரு.ஏ.சுந்தரகுமார்,  திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர். திரு .குணாளன் அவர்களும், மற்றும் திருக்கோவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர். திரு.S.தர்மபாலன் மற்றும் திருக்கோவில் கல்வி வலய த்மிழ் மொழி திரு வினாயகமூர்த்தி அவர்களும், தம்பிலுவில் தேசிய பாடசாலை அதிபர் திரு.S.இரவீந்திரன் அவர்களும், திருக்கோவில் பிரதேச சபை சிரேஸ்ட முகாமைத்துவ உதவியாளர் திரு.சில்வஸ்ரர், மற்றும் பொது நூலகம் நூலகர் திருமதி, கோமதி நடராஜா மற்றும் நூலக உதவியாளர்கள்  திருS.புஸ்பராசா, திருமதிK சூரியகலா, திருமதி S.ரஜீந்தினி மற்றும் பாடசாலை மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், அதிபர்கள், திருக்கோவில் பிரதேச சபை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வின் போது திருக்கோவில் பிரதேச சபை ஊழியர்கள்,  பாடசாலை மாணவ, மாணவிகள் இணைந்து வாசிப்பினை ஊக்குவிக்கும் முகமாக ஓர் விழிப்புனர்வுப் பேரணினையும் நாடத்தினர், அத்துடன்  பாடசாலை மாணவ, மாணவிகளிடையோ நடாந்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் 1ம்,2ம்,3ம், இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கப்பட்டது.
No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!