Saturday, October 08, 2016

18 ஆம் திகதி முதல் க.பொ.த. உயர்தர செயற்பாட்டுப் பரீட்சைகள்!

எதிர்வரும் 18 ஆம் திகதி க.பொ.த. உயர்தர பரீட்சையின் செயற்பாட்டு பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சங்கீதம், நடனம் மற்றும் ஓவியம் போன்ற பாடங்களுக்கான செயற்பாட்டுப் பரீட்சை இம்மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலும், உயிரியல் வள தொழில்நுட்பத்துடன் தொடர்பான செயற்பாட்டுப் பரீட்சைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
பொறியியல் தொழில்நுட்ப துறையுடன் தொடர்பான செயற்பாட்டுப் பரீட்சை அடுத்த மாதம் 5 ஆம் 6 ஆம் 7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!