பதின்மூன்று(13) முன்பள்ளி பாடசாலைகளுக்கு கற்றல் சார் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Share:
அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கவீந்திரன் கோடீஸ்வன் அவர்களின்  பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட பதின்மூன்று (13) முன்பள்ளி பாடசாலைகளுக்கு மாணவர்களின் தேவைக்கேற்ப கற்றல் சார் உபகரணங்களை வழங்கும் நிகழ்வானது கடந்த 14.10.2016 திகதி வெள்ளி அன்று திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்றது.

இன் நிகழ்வில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கவீந்திரன் கோடீஸ்வன் அவர்களும், திருக்கோவில் பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு.S.ஜெகராஜன் மற்றும் முன்பள்ளி பொறுப்பளர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!