மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி

Share:
திருக்கோவில் தங்கவேலாயுதரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

ஆறு பிள்ளைகளின் தந்தையான குறித்த விவசாயி நேற்று மாலை மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கவேலாயுதரம் 19 ஆவது கட்டை வர்கந்தலாவை பகுதியில் வயல் வேளை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தவேளை மின்னல் தாக்கியதில் குறித்த விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மயில்வாகனம் தவபுத்திரன் எனும் விவசாயியே உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!