திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

Share:
திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாகத் தரம் உயர்த்தும் நோக்கில் சில அடிப்படை, உள்ளக அபிவிருத்திகளுக்காக சுமார் 37 மில்லியன் ரூபாய்; நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் அழைப்பின் பேரில் இந்த வைத்தியசாலைக்கு செவ்வாய்க்கிழமை (10) மாலை வந்து கலந்துரையாடியபோதே, அவர் இதனைக் கூறினார்.
திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையானது பழைய  வைத்தியசாலையாக இருந்தபோதும், இதற்குப் பின்னர் உருவாகிய  வைத்தியசாலைகள் தற்போது ஆதார வைத்தியசாலைகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
எனவே, திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையை தனது பதவிக்காலத்தில் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!