வாகனங்களின் விலை அதிகரிப்பு

Share:
வாகனங்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டது.
உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சின் திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டமையே இதற்குக் காரணம்.
என்ஜின் கொள்ளளவு மற்றும் வாகனத்தின் பெறுமதிக்கு அமைய உற்பத்தி வரி அறவிடுவதற்கு கடந்த வரவு செலவுத் திட்டத்தில் பிரேரிக்கப்பட்டது.
இவற்றில் அதிக பெறுமதியே இதன்போது வரியாக அறவிடப்படுகின்றது.
வாகனத்தின் பெறுமதியைக் குறைவாக மதிப்பீடு செய்து, குறைந்தளவு வரி செலுத்துவதனால் அரசாங்கத்திற்கு அதிக வருமான இழப்பு ஏற்பட்டதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியது.
அதன்பிரகாரம், என்ஜின் கொள்ளளவுக்கு அமைய அறவிடப்படும் வரி புதிய திருத்தத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
என்ஜின் கொள்ளவு குறைந்த வாகனங்களுக்கு சலுகைகளை வழங்கி, என்ஜின் கொள்ளளவு அதிகமாகவுள்ள சொகுசு வாகனங்களுக்கு அதிக வரியை விதிப்பதே புதிய உற்பத்தி வரித் திருத்தத்தின் நோக்கம் என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தத் திருத்தத்தின் ஊடாக என்ஜின் கொள்ளவு சிசி 1000 ற்கும் குறைவான வாகனங்களுக்குக் குறைந்த வரியை அறவிட்டு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மோட்டார் சைக்கிள் தவிர்ந்த ஏனைய அனைத்து வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!