அகோரமாரியம்மன் மற்றும் பிள்ளையர் ஆலயம் உடைத்துசேதம் : ஆரம்பம் எனவும் எழுதப்பட்டுள்ளது

அம்பாறை, சம்மாந்துறை கோரக்கர் கோயில் கிராமத்திலுள்ள அகோரமாரியம்மன் ஆலயமும் அதேவளாகத்திலுள்ள பழம்பெரும் பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் ஆலயத்தில் சுற்றியிருந்த பரிவாரமூர்த்தி ஆலயங்களில் உள்ள சுவாமிகள் சுருவங்களை இனம் தெரியாத விசமிகளால் உடைத்து தலைகீழாக மண்ணில் புதைக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.

வழமைபோல இன்று வெள்ளிக்கிழமை ஆலயத்தின் பூஜைக்காக கதவைத்திறந்து உள்ளே சென்றபோது ஆலயத்தைச் சுற்றியுள்ள 9 பரிவாரமூர்த்தி ஆலயங்களில் 7 ஆலயங்கள் உடைக்கப்பட்டு இங்கு உள்ளிருந்த லிங்கங்கள், தகர்தெடுக்கப்பட்டு வெளியில் மணலில் தலைகீழாக புதைக்கப்பட்டுள்ளன அதேவேளை அங்கிருந்த சாமிபடங்கள் வெளியே எடுக்கப்பட்டு மணலினுள் புதைக்கப்படட்டு மண்மேடுபோன்று ஆக்கப்பட்டு அதில் தமிழ் எழுத்துக்கள் புரியாதவாறு சந்தேகமாக எழுதப்பட்டுள்ளதுடன் 999 என 9 தடவைகள் மணலில் எழுதப்பட்டுள்ளதுடன் மேலும் ஸ்ரார்ட் அதாவது ஆரம்பம் எனவும் எழுதப்பட்டுள்ளது

அதேவேளை அகோரமாரியம்மன் ஆலயத்திற்கு முன்னாலிருந்த பிரதான பெரிய திரிசூலம் தகர்கப்பட்டு வீழ்த்தகப்பட்டுள்ளது ஆலய மூலஸ்தானத்திற்கான பிரதான கதவை தகர்ப்பதற்கு முயற்சிசெய்யப்பட்டு அவை கைகூடாததையிட்டு கதவைகொத்தியுள்ளனர் திரைச்சீலை மற்றும் பெரிய குத்துவிளக்குகள் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் பிள்ளையார் ஆலயத்திலும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த நாகதம்பிரான் ஆலயத்தினுள் இருந்த 7 நாகதம்பிரான் வெணகல சிலைகளை அங்கிருந்து அகற்றி வெளியில் குவிக்கப்பட்டுள்ளதுடன் அதன் நடுவே பேனா ஒன்றும் காணப்படுகின்றது இவ்வாறு ஆலயத்தினை உடைத்து நாசப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் விசேட தடவியல் பிரிவு மற்றும் மேப்பநாயுடன் தேடுதல் நடாத்தி விசாரணைகளை  மேற்கொண்டுவருகின்றனர் இதேவேளை ஆலயத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலையம் அமைந்திருப்பதுடன் அருகில் கோரக்கர் தமிழ் வித்தியாலயமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

இதேவேளை .இச்சம்பவ இடத்திற்கு தமிழ். தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன், மற்றும் தமிழரசு கட்சி முக்கியஸ்தகர் ஜெயசிறி, ஆகியோர் சென்று நிலமைகளை பார்வையிட்டுள்ளனர்

Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!