சீரற்ற வானிலையால் பிள்ளைகளுக்கிடையில் தொற்றுநோய்கள் பரவக்கூடிய அவதானம்

Share:
அதிக மழையுடனான வானிலைக் காரணமாக வௌ்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பிள்ளைகளுக்கிடையில் தொற்றுநோய்கள் பரவக்கூடிய அவதானம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வயிற்றோட்டம், வாந்தி மற்றும் சரும நோய்கள் என்பன பரவலாக ஏற்படக் கூடும் என சுகாதார அமைச்சின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
எனினும் உரிய சிகிச்சை மற்றும் முன்ஆயத்த நடவடிக்கைகளூடாக அவற்றை தவிர்த்துக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக காய்ச்சல், வயிற்றோட்டம், மலத்துடன் இரத்தக் கசிவு அல்லது சிறுநீர் கழிப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகள் சிறார்களுக்கு ஏற்படுமாயின் உடனடியாக நீராகாரங்களை வழங்குமாறு விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கூறியுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஜீவனி, கஞ்சி, தோடம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை வழங்குமாறும், நோய் அறிகுறி குறைவடையாவிடின் உடனடியாக வைத்திசாலைக்கு கூட்டிச் சென்று சிகிச்சை பெற வேண்டும் எனவும் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!