உலகிலேயே மிக விலை குறைந்த மடிக்கணனி அறிமுகம்

Share:
உலகின் விலை குறைந்த மடிக்கணனி 9,999 ரூபாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐபால் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள காம்ப்புக் எக்ஸலன்ஸ் (CompBook Excelance ) ரக மடிக்கணனிகள் உலகின் விலை குறைந்த மடிக்கணனி என்ற பெருமையைப் பெறுகிறது.
விண்டோஸ் 10 இயங்குதளத்துடனும், 11.6 இன்ச் திரை அளவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மடிக்கணனி 2 ஜி ரெம் வசதி கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், 32GB சேமிப்பு வசதி கொண்டதாகவும், இதனை 64GB வரை அதிகரித்துக்கொள்ளும் வகையிலும் CompBook Excelance வெளிவரவுள்ளது.
அதேபோல, வைஃபை, புளூடூத் வசதிகள் மற்றும் 3 யுஎஸ்பி போர்ட்டுகள் உடனும் இது வெளிவரவுள்ளது.
அதேபோல, CompBook வரிசையில் எக்செம்பிளேர் (Exemplaire) ரக மடிக்கணனிகள் ரூ. 13,999 விலையில் 14 இன்ச் திரை அளவுடன் வெளிவரவுள்ளது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ரூ.10,459 விலையில் குறைந்த விலை மடிக்கணனி மொடலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!