பேஸ்புக்கில் குழந்தைகளின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தால் சிறைத்தண்டனை

Share:
உங்களது குழந்தைக்கு கூட தனிப்பட்ட உரிமை உண்டு, இதனை வலியுறுத்த தனது குழந்தையின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்யும் பெற்றோர்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் சிறைத்தண்டனை அல்லது பெரிய அபராதம் விதிக்குமாறு ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
ஒருவருடைய குழந்தை வளர்ந்து தனது சிறுவயது புகைப்படங்களை அதிகமாக பகிர்ந்த பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யு வகையில் அந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் குழந்தையின் தனிப்பட்ட உரிமையை மீறியதாகக் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு 35,000 பவுண்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
பல பெற்றோர்கள் தங்களது குழந்தை செய்யும் வேடிக்கையான விடயங்களை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பகிருவதை பழக்கமாக கொண்டுள்ள நிலையில், இந்த சட்டத்தின் மூலம் பிரான்ஸ் அரசாங்கம் அதிகமான வருவாயை ஈட்டலாம் என கூறப்படுகிறது.
குழந்தையின் 5 வயதிற்கு முன்பே பெற்றோர்கள் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 200 புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்கிறார்கள் என்று  பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் கூறப்பட்டுள்ளது.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!