நாளைமுதல் கிழக்கு மாகாணப் பாடசாலைகள் 12 மணியுடன் மூடப்படும்.

Share:
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச பாடசாலைகளையும் பகல் 12.00 மணியுடன் நிறைவு செய்யுமாறு கிழக்கு மாகாண கல்வி கிழக்குமாகாண  கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
அதிக வெப்ப காலநிலையை கருத்தில் கொண்டு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் அடிப்படையில், கிழக்கு மாகாணத்திலுள்ள சகல அரச பாடசாலைகளும் நாளை (03) முதல், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை, காலை 7.30 தொடக்கம் நண்பகல் 12.00 மணிவரை நடாத்தப்படும் என கிழக்குமாகாண  கல்விப் பணிப்பாளர் எம்.ரீ. நிஸாம்  தெரிவித்தார்.

இதேவேளை, நிலவும் உஷ்ண காலநிலை காரணமாக, இன்று (02) முதல் மறுஅறிவித்தல் வரை, வடமத்திய மாகாண பாடசாலைகள் நண்பகல் 12.00 மணிக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!