Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று மோட்டார் குண்டுகள் மீட்பு

திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பிரதேச காட்டுப் பகுதியில்; மூன்று மோட்டார் குண்டுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்...

திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பிரதேச காட்டுப் பகுதியில்; மூன்று மோட்டார் குண்டுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குறித்த காட்டுப் பகுதிக்குச் சென்று நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 81 மோட்டார் ரக மூன்று மோட்டார் குண்டுகளை மீட்டதாகவும் இவ்வாறு மீட்கப்பட்ட குண்டுகளை அவை விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். -