Wednesday, March 02, 2016

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் III ஆம் வகுப்புக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கல்வி நிர்வாக சேவை தொழிற் சங்கத்தினால் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களிடம் செய்த வேண்டுகோளுக்கு அமைய கல்வி நிர்வாக சேவையின் III ஆம் வகுப்

பு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் காலம் 2016 மார்ச் மாதம் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 2016 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

ஆரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.அவ்வாறே, இதற்கு முன்னர் பிரமாணக் குறிப்புகளுக்கு அமைய கல்வி நிர்வாக சேவைப் பரீட்சைக்குத் தோற்றிய தடவைகள் பற்றி கணக்கில் எடுக்காததுடன் புதிய பிரமாணக் குறிப்புகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்கு இரண்டு தடவைகள் தோற்றமுடியும். அவ்வாறே வயது அளவும் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் வேண்டுகோளின்படி திருத்தப்பட்டுள்ளது.

அதற்கு அமைய திறந்த போட்டிப் பரீட்சைக்கு உச்ச வயது வரம்பு 30 இலிருந்து 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மட்டுப்படுதப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு 50 இலிருந்து 52 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், அதிபர் சேவை 1 ஆம் தரத்திலுள்ளோருக்கான உச்ச வயது வரம்பு 55 இலிருந்து 58 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. http://www.moe.gov.lk/