சட்டவிரோத மதுபான விற்பனை இடங்கள் முற்றுகை;சந்தேக நபர் தப்பி ஓட்டம்

Share:
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத மதுசாராய விற்பனையில் ஈடுபடும் வீடுகளை இன்று புதன்கிழமை பொலிஸார் முற்றுகையிட்டபோது, பொலிஸாரை தாக்கிவிட்டு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார்  தெரிவித்தனர். 

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த திருக்கோவில் பொலிஸ் குழுவினர், பிரதேசத்தில் சட்டவிரோதமாக வீடுகளில் மதுசார விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்யும் வகையில் வீடுகளை சுற்றிவளைத்தபோது,அதில் ஒருவர் பொலிஸாரை தாக்கிவிட்டு  தப்பிச் சென்றுள்ளார்.