இளையோர் பாரளுமன்றத் தேர்தல் இன்று நடைபெற்றது

Share:
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக செயற்படுத்தப்படும் இளையோர் பாரளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம், தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள் அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து தேர்தலை நடத்தின.
இந்தத் தேர்தலுக்கான பிரசார அனுசரணையை நியூஸ்பெஸ்ட் வழங்கியது.
மூன்றாவது இளையோர் பாராளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது.
நாடு பூராகவுமுள்ள 334 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற்றது.
4,38,400 இளைஞர், யுவதிகள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.