குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிடும் பெற்றோரை எச்சரிக்கும் பேஸ்புக்

Share:
ஸ்மார்ட்போன்களின் அதீத புழக்கத்தால், நமது பிள்ளைகள் செய்யும் சின்னச் சின்ன சேட்டைகள் அனைத்தையும் படமெடுப்பது எளிதாக உள்ளது.
இவற்றையெல்லாம், நமது உற்றார் உறவினருடன் பகிர்ந்துகொள்ள நாம் பேஸ்புக் பக்கத்தை அணுகுவோம்.
பேஸ்புக் பக்கத்தில் இவற்றைப் பகிரும்போது, நமக்கு நெருக்கமான உறவினர் மட்டுமின்றி உலகின் எந்த மூலையில் உள்ளோரும் பார்க்க முடியும்.
இதுபோல குழந்தைகளின் புகைப்படத்தை நாம் பேஸ்புக் பக்கத்தில் பகிர முயலும்போது, உறவினர் மற்றும் நண்பர்கள் மட்டும் பார்த்தால் போதும் என நீங்கள் எண்ணினால், அவர்கள் இருக்கும் குறிப்பிட்ட குழுவிற்கு மட்டும் நம் பிள்ளைகளின் படத்தை பகிர்ந்துகொள்ளலாம்.
ஒருவேளை தவறுதலாக உலகத்துக்கே (public) பகிரும் செயல்முறையில் புகைப்படத்தை தட்டிவிட்டாலும், பேஸ்புக் தானாகவே முன்வந்து, ‘உங்களது குழந்தைகளின் இந்த புகைப்படத்தை உலகத்துடன் பகிர வேண்டுமா? நீங்கள் இந்தப் படங்களை உங்களது குடும்பத்துடன் மட்டுமே பகிர்வீர்கள் அல்லவா? என எச்சரிக்கையளிக்கும்.
இந்தத் தகவலை பேஸ்புக்கின் பொறியியல் துணைத் தலைவரான ஜே பாரிக் வெளியிட்டுள்ளார்.