'சிறந்த சேவை வழங்காவிடின் வீட்டுக்கு போகும் நிலை ஏற்படலாம்'

Share:
அசர உத்தியோகத்தர்கள் பொது மக்களுக்கான சேவையை வினைதிறனுடன் கூடிய விளைதிறன் கொண்டதாக அமைய வேண்டும்.இவ்வாறு உத்தியோகத்தர்கள் தொடர்ந்து அசட்டைப் போக்கில் அலுவலகங்களில் செயற்படுவார்களே ஆனால் அவர்கள் தொழிலை இழந்து வீடுகளுக்கு போகவேண்டிய நிலைமைகள் இந்த நல்லாட்சியில் ஏற்படலாம் என திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் தெரிவித்தார். திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இன்று 11ஆம் திகதி இடம்பெற உளவளத்துணை கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்படி கருத்தினை முன்வைத்திருந்தார்.

 இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், அரச திணைக்களங்களில் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் தங்களின் மன நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.அதனுடாக சிறந்த சேவையை பொதுமக்களுக்கு வழங்க முடியும். தற்போது ஒரு சில உத்தியோகத்தர்களை தவிர பலர் தமது கடமைகளை சரியாக செய்து முடிப்பது இல்லையென அறியக் கூடியதாக உள்ளது.இந்நிலைமைகள் தொடர்ந்து செல்லுமிடத்து தற்போது உள்ள நல்லாட்சியில் பல எதிர்விளைவுகளை உத்தியோகத்தர்கள் சந்திக்க வேண்டியதுடன் தொழிலை இழந்து வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலைமைகளும் ஏற்படலாம்.

 இன்று இலட்சக்கணக்கானவர்கள் படித்துவிட்டு தொழில் இல்லாது மிகவும் துன்பமான வாழ்கையை அனுபவித்து வரும் நிலையில் எமக்கு அரச தொழில் கிடைத்திருப்பது நாம் செய்த புண்ணியம். இச்சந்தோசம் தொடர்ந்து எமது குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டுமென சிந்தித்து பயபக்தியுடன் தங்களின் பணிகளை பொதுமக்களின் மேம்பாட்டுக்காக முன்னெடுக்க வேண்டும் என்றார்