ஆண்டிறுதிப் பரீட்சை

Share:
கிழக்கு மாகாண மட்ட ஆண்டு இறுதிப் பரீட்சை எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 30ஆம் திகதிவரை மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் சம காலத்தில் நடைபெறுமென பாடசாலை அதிபர்களுக்கு இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளதாக  மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் அறிவித்துள்ளார். தாய்மொழி, ஆங்கிலம், கணிதம், சரித்திரம், விஞ்ஞானம் ஆகிய 05  கருப்பாடங்களுக்குரிய பரீட்சை கிழக்கு மாகாண மட்டத்தில் பொதுப் பரீட்சையாக ஒரே நேரத்திலும் ஏனைய பாடங்கள் வலய மட்டத்திலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 06, 07, 08ஆம் தரங்களுக்கான வினாப்பத்திரங்கள் 02  மணித்தியாலங்களைக்; கொண்டதாகவும் 09, 10ஆம்   தரங்களுக்கான வினாப்பத்திரங்கள் 03 மணித்தியாலங்களைக் கொண்டதாகவும் அமையும். தரம் -09 மாணவர்களுக்கு கருப்பாடங்கள் தவிர்ந்த ஏனைய பாடங்கள் 02 மணித்தியாலங்களைக் கொண்டதாக அமையும். எதிர்வரும் 20ஆம் திகதி  08ஆம், 09ஆம் தரங்களுக்கு பரீட்சை நடைபெறமாட்டாதெனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.