நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் நாளை சமர்ப்பிப்பு

Share:
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றினை அமைச்சரவையில் சமர்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார் .
அலரி மாளிகையில் இன்று 2015.11.17 இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் .
இதேவேளை தேர்தல் முறைமையை மறுசீரமைப்பு குறித்து அமைச்சரவை பத்திரம் ஒன்றினையும் அமைச்சரவையில் சமர்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.