க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 27ஆம் திகதி வெளியிடப்படும்.

Share:
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 27ஆம் திகதி
வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெற்ற இந்தப் பரீட்சை 2,180 பரீட்சை நிலையங்களில் இதில் 309,069 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.


பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளை  http://www.doenets.lk/exam/index.jsf   
ஆகிய இணையத்தளங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.