பல மில்லியன் ரூபாய்கள் கிழக்கின் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கீடு - முதலமைச்சர் நன்றி தெரிவிப்பு

மாகாண சுகாதார அமைச்சர்களுக்கான மாநாடு நேற்று காலை 10 மணிக்கு மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் கொழும்பு நாரஹேன்பிட்ட இரத்த வங்கி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களின் அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், பணிப்பாளர்கள், மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்ட  இம்மாநாட்டில் கிழக்கு மாகாணத்தில் இருந்து இடைக்கால சுகாதார அமைச்சரும் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டு பல கோரிக்கைகளை முன்வைத்தார்.

01. கிழக்கு மாகாணத்தில் ( Food waste testing laboratory ) உணவுகள் வெளியிடங்களுக்கு பரிசீலனைக்கு அனுப்பப் படுவது நிறுத்தப்பட்டு கிழக்கிலேயே அதன் வேலைகள் இடம்பெற வேண்டும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டவேண்டும். 

02.கிழக்கு மாகாணத்தில் 4000 மருந்தகங்கள் காணப்பட்ட போதிலும் இவைகளில் அதிகமானவை பதியப்படாமல் இருக்கின்றன. அவைகள் உடனடியாக  ம ருந்தகக் கூட்டுத்தாபனத்தால் இனங்காணப்பட்டுசட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும், 

03.கிழக்கில் உள்ள அனைத்து வைத்திய சாலைகளிலும் குளிசைகளை கடதாசித்துண்டுகளில் வைத்து ஒழுங்கு முறையற்ற விதத்தில்  நோயாளர்களுக்கு வழங்கப்படுவது தடைசெய்யப்பட்டு (என்பலப்) கடதாசி உறையிலான முறை அமுலுக்கு வரவேண்டும். அதனை கிழக்கில் அமுலாக்க  உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

04.மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஒசுசல அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனம் திறந்துவைத்தல்.
அத்துடன் கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் மேற்குறிப்பிட்ட வெற்றிடங்களுக்கு அவசரமாக ஆட்களை நியமிக்க வேண்டும்.

01.ஆலோசகர்கள் (consultant) -19
02.மருந்தக அதிகாரிகள் (Media Officer) - 113
03. தாதி உத்தியோகத்தர்கள் (Nursing officer) -73
04.பொதுச் சுகாதாரப் பரிசோதகர் (PHI) - 14
05.மருத்துவ ஆய்வக தொழிநுற்பவியலாளர் (MLT) -04
06.மருந்தாளர்கள் (pharmacist) -32
07.மருந்து விநியோகஸ்தர் (Dispensers) - 53

 இதனுடன் தொழிலாளர்கள், வேலையாட்கள் என ஆளணிகளை உருவாக்க வேண்டும்.

*கிழக்கில் 12 ஆதார வைத்தியசாலைகளும் 50 மாவட்ட வைத்தியசாலைகளும், 12 சுற்றயற் கூறுகளும் இருக்கின்றன.

01. ஆலோசகர்களுக்கும், மருத்துவ அதிகாரிகளுக்குமான தங்குமிட விடுதி அமைக்கப்படவேண்டும்.
02.மருத்துவக் கட்டிடங்கள் அமைக்கப்படவேண்டும்.
03.தாதியர்களுக்கான விடுதிகள் அமைக்கப்படல்வேண்டும்.
04.வாகன வசதிகள் அம்பியுலன்ஸ், டபல் கப், போன்றன.

அத்துடன் மருத்துவத் தேவைக்கான உபகரணங்களான கதிரியக்கக் கருவிகள்
வைத்தியசாலையின் தேவையாக பிணவறைக் குளிரூட்டிகள்,
போன்றன வழங்கப்படவேண்டும்.

மட்டக்களப்பில் உள்ள பிராந்திய பயிற்சி நிலையம் உடனடியாக அமுலுக்குக் கொண்டுவரப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படவேண்டும்.

என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் தாதியர்களின் வருடாந்த இடமாற்றம் தொடர்பாக சரியான வைத்தியசாலைக்கு அவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் அத்துடன் கிழக்கு மாகாணத்துக்கு மத்திய சுகாதார அமைச்சர் வருகை தரவேண்டும் அங்குள்ள வைத்தியசாலைகள் அவற்றின் குறைபாடுகளை நேரில் கண்டறிய வேண்டும் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர்  ஹாபிஸ் நஸீர் அஹமட் கோரிக்கை விடுத்தார்.
Share on Google Plus

About news

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!