திருக்கோவில் குமர வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுவர் தின, ஆசிரியர் தின நிகழ்வுகளும்

Share:
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட குமர வித்தியாலயத்தில் இம்முறையும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஒத்துழைப்புடன் வித்தியாலய அதிபர்  திரு. இ. இரத்தினகுமார் தலைமையில் 2015. 10. 01 அன்று சிறுவர் தினமும் 2015. 10. 06 அன்று ஆசிரியர் தினமும் மிக சிறப்பான முறையில்  இடம்பெற்றது. 

சிறுவர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கோட்டக் கல்வி  அதிகாரி திரு V. ஜெயந்தன் அவர்களும் விசேட அதிதியாக சிறுவர் நன்னடத்தை பொறுப்பதிகாரி க. சசிகரன்  அவர்களும் கலந்து சிறப்பித்தனர். 

மற்றும் ஆசிரியர் தின விழாவில் பிரதம அதிதியாக வலயக் கல்வி பணிப்பாளர் திரு. ஆர். சுகிர்தராஜன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக பிரதி கல்விப் பணிப்பாளர் திட்டமிடல்  திருமதி த. ராஜசேகர் அவர்களும் பிரதி கல்வி பணிப்பாளர் முகாமைத்துவம் செல்வி. என். வரன்யா அவர்களும் கலந்து  சிறப்பித்தனர்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!