யானை 20 அடி குழியில் விழுந்துள்ளன...

Share:


அம்பாறை, திருக்கோவில் வன ஜீவராசி திணைக்களப் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளப் கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தாய் யானையும் அதன் குட்டியும் சுமார் 20 அடி குழியில் விழுந்துள்ளன. யானைகள் இரண்டும் பிளிறும் சத்தம் கேட்டு விரைந்து வந்த கிராமவாசிகள் திருக்கோவில் வன ஜீவராசி திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதையடுத்து வன ஜீவராசி அதிகாரிகள் இவ்விடத்துக்குச் சென்று யானைகளை குழியில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தங்கவேலாயுதபுரம்,கஞ்சிகுடியாறு பகுதியில் இவ்வாறு சுமார் 20க்கும் மேற்பட்ட பாரிய குழிகள் வெட்டப்பட்டு கிடப்பதாகவும் இதன் காரணமாக கடந்த காலங்களில் யானைகள் பல விழுந்து இவ்வாறு மீட்டுள்ளதாகவும் இவ்வாறான குழிகளால் மிருகங்களுக்கு மட்டுமல்ல இனிவருகின்ற மழைக்காலமாக இருப்பதனால் மனிதர்களுக்கும் உயிராபத்தினை ஏற்படுத்தக் கூடும். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனமெடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!